சூப்பர்நேச்சுரலை தொடரைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் முன்னர், இந்தத் தொடரை உருவாக்கிய எரிக் கிரிப்கே அதனை மேம்படுத்த சுமார் 10 வருடங்கள் உழைத்திருந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தில் நகர புராணக்கதைகளின் மீது ஈர்ப்பைக்
கொண்டிருந்தார். அவர் சூப்பர்நேச்சுரலை ஒரு திரைப்படமாக எடுக்க நினைத்திருந்த போதும் அதனைத் தொடராக எடுப்பதற்கு வெற்றிகரமான களம் அமையாததால் பல ஆண்டுகளைச் செலவளித்திருந்தார். இறுதியான தயாரிப்பாக வெளிவருவதற்கு முன்னதாக இதன் கருத்து பல்வேறு கட்டங்களைக் கடந்திருந்தது. இதன் பிரதான சிந்தனை தொகைநூல்களில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. சிறுபக்க செய்தித்தாள் செய்தியாளர்களில் சிலர் நாடு முழுவதும் வேனில் சுற்றி "உண்மையைக் கண்டறிய தீயசக்திகளிடம் போராடுகின்றனர்". கிரிப்கே இதை ஒரு சாலைப் பயணத் தொடராக இருக்க வேண்டுமென எண்ணினார். இதைப் பற்றி எண்ணுகையில் "இது இந்தக் கதைகளைச் சொல்வதற்கு சிறந்த வாகனமாகும், ஏனெனில் இது தெளிவானது, சிறும சிறப்பையும் அமெரிக்கர்களின் தனித்தன்மையையும் வாய்ந்தது... இந்தக் கதைகள் நாடுமுழுவதும் உள்ள நகரங்களில் நடக்கிறது. மேலும் இந்தக் கதைகளில் அதிகமான அறிவு நுட்பங்களைக் கொண்டு இயக்கி இருக்கின்றனர்." WB தொடரான டார்ஜனுக்காக ஏற்கனவே இவர் கதை எழுதியிருந்தார், கிரிப்கேவின் இந்த நீண்ட கால சிந்தனையை நெட்வொர்க்கிற்கு கூற வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அவர் இந்த வாய்ப்பை சூப்பர்நேச்சுரலுக்காக பயன்படுத்திக் கொண்டார்.[இருந்தபோதும், நெட்வொர்க் சிறுபக்க செய்தித்தாள் செய்தியாளர்கள் என்ற சிந்தனையை நிராகரித்தது. எனவே கிரிப்கே கடைசி நேரத்தில் தோன்றிய யோசனையான சகோதரர்கள் பாத்திரத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.லாரன்ஸ், கன்சாஸில் இந்த சகோதரர்கள் இருப்பதாக முடிவு செய்தார். நகர புராணக்கதைகளுக்குப் பிரபலமான இடமான ஸ்டல் இடுகாடு, இதற்கு அருகாமையில் அமைந்திருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டும் நேரம் வந்த போது, ஜேக் கெரூஅக்கின் சாலைப் பயண நாவலான ஆன் த ரோடிற்கு மரியாதை செலுத்தும் வகையில் "சல்" மற்றும் "டீன்" எனப் பெயரிட கிரிப்கே முடிவெடுத்தார். இருந்தபோதும், "சல்" என்ற பெயர் முக்கிய பாத்திரத்திற்கு பொருத்தம் இல்லாமல் இருப்பதாகக் கருதினார். எனவே அதன் பெயரை "சாம்" என மாற்றினார். நடிகர் ஹாரிசன் போர்டைத் தொடர்பு படுத்தி சகோதரர்களின்' கடைசிப் பெயர் "ஹாரிசன்" என இருக்க வேண்டும் என்பது இவரின் முக்கியமான நோக்கமாக இருந்தது, "டெவில்-மே-கேர் படத்தின் ஹான் சோலோவைப் போல் தைரியமானவனாக" டீன் இருக்க வேண்டுமென கிரிப்கே விரும்பினார். இருந்தபோதும், கன்சாஸில் சாம் ஹாரிசன் என்பவர் வாழ்ந்து வந்தார், அதனால் சட்ட காரணங்களினால் பெயர் மாற்றப்பட்டது. வின்செஸ்டர் மிஸ்டரி வீட்டின் மேல் உள்ள ஆர்வத்தாலும் மேலும் "ஒரு மேற்கத்திய நவீன" முறையில் தொடரைக் கொடுக்க விருப்பப்பட்டதாலும், "வின்செஸ்டர்" என்ற குடும்பப் பெயரை வைக்க கிரிப்கே உறுதியாக முடிவெடுத்தார். எனினும், இதுவும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. முதல் பெயரான சாம் மற்றும் டீனின் அப்பாவின் பெயர் "ஜேக்" ஆகும், மேலும் ஜேக் வின்செஸ்டர் என்பவர் கன்சாஸில் வாழ்ந்து வந்தார், அதனால் கிரிப்கே பாத்திரத்தின் பெயரை "ஜான்" என மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
Size | Direct download |
---|---|
750mb(480p) | Download |
1.1GP(720p) | Download |
3.6GP(1080p) | Download |
0 Comments