இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்காக ஒரு புதிய டேட்டா ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரூ 119 ப்ரீபெய்ட் திட்டம்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய திட்டங்களுடன் கூடுதல் தரவைப் பெறுவார்கள். ஏனினில், இந்தத் திட்டத்தில் தரவு இழப்புக்கான கவலை இருக்காது.

பல்வேறு விலை வரம்புகளில் தற்போது கிடைக்கும் பல டேட்டா பேக்குகளுக்கு கூடுதலாகப் புதிய ஆட்-ஆன் பேக் வருகிறது. புதிய ரூ .119 ஏர்டெல் (Airtel) திட்டம் பயனர்களுக்கு 15 ஜிபி 4 ஜி டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு ஆட்-ஆன் பேக் என்பதால், இதற்கான சொந்த செல்லுபடி இருக்காது. அதாவது, பயனர்களின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம்வரை அது நீடிக்கும்.
இந்தத் திட்டத்தில் அழைப்பு வசதிகளோ எஸ்எம்எஸ் நன்மைகளோ கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவற்றைப் பெற, பயனர்கள் வரம்பற்ற திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
மேலும், இந்தத் திட்டம் பயனர்களுக்கு எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கையும் வழங்குகிறது. இது அவர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலியில் ஈரோஸ்நவ், ஹோய்சோய், மனோரமா மேக்ஸ் (ErosNow, Hoichoi, ManoramaMax) ஆகியவற்றுக்கான இலவச அணுகலை அனுமதிக்கிறது. இது 30 நாட்களுக்குப் பொருந்தும்.
இந்தத் திட்டம் மற்ற ஆட்-ஆன் பேக்குகளின் பட்டியலில் இணைகிறது. இந்தப் பட்டியலில் ரூ .48, ரூ .78, ரூ .89, ரூ .98, ரூ .131, ரூ .248 மற்றும் ரூ .251 திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பயனர்கள் கொண்டுள்ள திட்டங்களின் செல்லுபடி காலத்தைக் கொண்டிருக்கும். ரூ .48, ரூ .98 மற்றும் ரூ .251 பேக்குகள் கூடுதல் தரவை மட்டுமே வழங்குகின்றன. மற்ற திட்டங்கள் பல்வேறு பொழுதுபோக்கு தளங்களுக்கான அணுகல் என்ற கூடுதல் நன்மைகளையும் அளிக்கின்றன.
இதற்கிடையில், ஏர்டெல் சமீபத்தில் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney Hotstar) சந்தாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ரூ .499 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 30 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல், விங்க் மியூசிக் ஃப்ரீ, இலவச ஹெலோடூன்ஸ், அப்போலோ 24/7 சர்கிள், ஒரு வருடத்திற்கான இலவச ஆன்லைன் கோர்சுகள் மற்றும் FASTag ரீசார்ஜில் 100 ரூபாய் கேஷ்பேக் ஆகியவை கிடைக்கின்றன. இந்தத் திட்டம் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.
0 Comments